பெயரை மாற்றிய சமந்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Samantha Akkineni Actress samantha
By Petchi Avudaiappan Jul 30, 2021 05:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகை சமந்தா சமூக வலைத்தள பக்கங்களில் திடீரென தனது பெயரை மாற்றிக் கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் தனது பெயரை சமந்தா அக்கினேனி என்று வைத்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா ட்விட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது பெயரை திடீரென எஸ் (S) என சமந்தா மாற்றியுள்ளார். இருப்பினும் திடீர் பெயர் மாற்றத்துக்கான காரணத்தை நடிகை சமந்தா வெளியிடவில்லை.