நாங்கள் கணவன் மனைவி பந்தத்திலிருந்து பிரிகின்றோம் - நாகசைதன்யா சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

nagachaitanya actresssamantha brokeup
By Irumporai Oct 02, 2021 10:35 AM GMT
Report

சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே இது குறித்து இமுழுமையாக விளக்கம் கொடுக்காமல் இருந்து வந்தனர்.

 சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நான் சிறிய வயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன்.

இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் கடைபிடித்து வருகிறேன்.

சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. என்று தெரிவித்திருந்தது .இந்த  நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது. இந்த நிலையில் சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர் அதில்: நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்ததுஎப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.