விருது விழாவில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை சமந்தா - வைரலாகும் புகைப்படங்கள்
கவர்ச்சியான உடையில் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டதட்ட 3 வருடங்கள் மண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக அவர் அறிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த சமந்தா கவச்சியான வேடங்களிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தது விவாகரத்து பிரச்சனைக்கு காரணமாக சொல்லப்பட்டது. தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் நேற்று கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் என்கிற விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பச்சை நிற மாடர்ன் கவுனில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.