Friday, Jul 4, 2025

“நம்பர் 1 நடிகையாகும் ஆசை உள்ளதா?” - ரசிகரின் கேள்விக்கு நச்சுன்னு பதிலளித்த நடிகை சமந்தா

samanthaanswersfanquery samaboutbeingno1 actresssamanthaq&a
By Swetha Subash 3 years ago
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.

இவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகர்களுடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ஃபஹத் ஜோடியாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் தோன்றவில்லை.

“நம்பர் 1 நடிகையாகும் ஆசை உள்ளதா?” - ரசிகரின் கேள்விக்கு நச்சுன்னு பதிலளித்த நடிகை சமந்தா | Actress Samantha Answers Fan Query About Being No1

இந்நிலையில் தற்போது அவர் விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த சாம் அதன் பின் ஆண்மீகம், நாடுகளுக்கு சுற்றுப்பயணம் என பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடுவதும் வழக்கம்.

அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் ஆர்வம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “நடிகையாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சினிமாவில் நம்பர் 1 என்பதை விட, நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும்’ என பதிலளித்திருக்கிறார் சமந்தா.