விவாகரத்துக்கு பிறகு பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை சமந்தா - படத்தை தயாரிக்கும் நடிகை டாப்ஸி
நடிகை சமந்தா பாலிவுட்டில் நடிக்க இருக்கும் புதிய படத்தை நடிகை டாப்ஸி தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக முன்னேறியுள்ளார்.
பாலிவுட் தவிர தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு Outsider FIlms என்று பெயர் வைத்துள்ளார். டாப்சி சினிமா பின்புலம் இல்லாமல் இருந்து வந்து சினிமாவில் வென்றவர். எனவே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் Outsider FIlms என்று பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.
நடிகை சமந்தா பேமிலி மேன் வி சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு பாலிவுட்டில் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் புதிய படத்தை டாப்ஸியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.