ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன்; அந்த ஹோட்டலில் 500 ரூபாய் சம்பளம்.. - நடிகை சமந்தா!
தனது வாழ்க்கையில் ஒரு காலத்தில் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டதாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.
நடிகை சமந்தா
தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடைசியாக குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சென்னை ஸ்டோரீஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், வெளிநாட்டு சுற்றுலா, நண்பர்களுடன் பயணம் என பொழுது போக்கி வருகிறார். சமந்தா ஒரு மேடை கொண்டபோது தனது வாழ்க்கையில் ஒரு காலத்தில் தான் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டதாக கூறியுள்ளார்.
அதில் "நான் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது என் அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார்கள். நானும் நன்றாக படித்து கல்லூரி சென்றேன்.
முதல் சம்பளம்
ஆனால் நான் மேலும் படிக்க விரும்பியபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக என் பெற்றோரால் என்னைப் படிக்க வைக்க முடியவில்லை. இதனால் கிடைத்த எல்லா வேலைக்கும் சென்றேன்.
குடும்ப வறுமை காரணமாக ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிட்டேன். உங்கள் பாதை என்ன என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள், நீங்கள் எதை வேண்டுமானாலும் கனவு காணுங்கள், அதை நீங்கள் அடைவீர்கள்" என்றால். அதேபோல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் சமந்தா கலந்துரையாடும் போது, அவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு? என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த சமந்தா " 10, 11-ம் வகுப்பு படிக்கும் போது ஹோட்டல் ஒன்றில் நடந்த ஒரு மாநாட்டை தொகுத்து வழங்கினேன். அதற்காக தனக்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கினார்கள். அதுதான் என்னுடைய முதல் சம்பளம்" என்றார்.