பிரபல நடிகை தற்கொலையில் மர்மம் - வீட்டில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருட்கள் - கேரளாவை உலுக்கிய சம்பவம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா சஜத் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் தற்போது பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே சஹானாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரின் தாய் உமைபன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். சஹானா தற்கொலையில், அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அக்கம் பக்கத்தினரும் சஹானா மற்றும் சஜ்ஜாத் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சஹானா, தூக்கிட்டுக்கொண்டதாக சஜ்ஜாத் காட்டிய பிளாஸ்டிக் ரோப்பை பறிமுதல் செய்த தடயவியல் துறை அதிகாரிகள் அத்தனை மெல்லிய ரோப்பில் ஜன்னல் கம்பியில் மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடியுமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சஹானா மற்றும் அவரது கணவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலும் தடயவியல் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சஜ்ஜாத் போதைக்கு அடிமையானவர் என்பதை உறுதி செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்த போதை மருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சஜ்ஜாத் பயன்படுத்திய போதை பொருட்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளவும் தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
அதோடு அந்த வீட்டின் உரிமையாளரிடமும் இருவர் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். சஹானாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீசார் தங்களின் விசாரணையை அனைத்து வழிகளிலும் துரிதப்படுத்தி இருக்கின்றனர்.

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில் IBC Tamil
சவூதியின் விமான நிலையம் - எண்ணெய் ஆலை மீது கடுமையான தாக்குதல்! மீண்டும் கொந்தளிப்பில் மத்திய கிழக்கு IBC Tamil