சொல்லலாமானு தெரியல; அஜித் மீது அப்படி ஈர்ப்பு இருந்தது - நடிகை சதா பளீச்
நடிகர் அஜித் குறித்து சதா பேசியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
நடிகை சதா
தமிழில் ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.

தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் அஜித், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார்.
crush
மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். சுமார் 30 படங்களில் நடித்துள்ள சதா, மும்பையில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், "எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும். இதை சொல்லலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.திருப்பதி படத்தில் நடிக்கும் போது அஜித் மீது எனக்கு crush இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil