சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது - ரஜினியின் பேச்சுக்கு நடிகை ரோஜா பதிலடி
சமீபத்தில் ரஜினிகாந்த் ஒரு விழாவில் முன்னாள் முதல்வர் குறித்து பேசியதை, நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுக்கு ரஜினி புகழாரம்
பிரபல திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து பெருமையாக பேசினார்.
அதில் ஹைதராபாத் நகரம் தொழில்நுட்ப ஹைடெக் நகராக மாறியதற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்று கூறினார்.
நடிகை ரோஜா கண்டனம்
இதனை தொடர்ந்து, பிரபல நடிகையும் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா பேசியது,
"கடந்த 2003-ம் ஆண்டுடன் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது, அதன் பின் 20 ஆண்டுகள் ஹைதராபாத் பெரும் வளர்ச்சி அடைந்ததற்கு சந்திரபாபு நாயுடு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்து பார்க்க வேண்டும்.
அதோடு, என்டி ராமராவ் மரணத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் தன் இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு ஒரு திருடன் என்றும் அவரை யாரும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.
ரஜினி அவர்களுக்கு இது தெரியவில்லை என்றால் என்டி ராமராவ் பேசிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன்.
ரஜினிகாந்த் மீது ஒரு நடிகராக எனக்கு மரியாதை உள்ளது, ஆனால் அதே நேரத்தில் சந்திரபாபு குறித்து நேற்று அவர் பேசியது சிரிப்பை தான் வரவழைத்தது, அவரது பேச்சை ஏற்றுக்கொள்ளமுடியது" என்று அவர் கூறினார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
