"கபடி...கபடி” - இளைஞர்களுடன் மல்லுக்கட்டிய நடிகை ரோஜா
நடிகை ரோஜா இளைஞர்களுடன் கபடி விளையாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்ற முன்னாள் நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகை ரோஜா இளைஞர்களுடன் கபடி விளையாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா அறக்கட்டளை சார்பில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நகரி சட்டமன்ற தொகுதியில் உள்ள டிகிரி கல்லூரி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தனது கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் சென்ற ரோஜா, பச்சை கொடி காட்டி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதனையடுத்து இளைஞர்களை உற்சாகப்படுத்த தனது கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் இணைத்து கபடி களத்தில் இறங்கி அவர் கபடி ஆடினார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற நடிகை ரோஜா அங்கு இளைஞர்களுடன் கபடி விளையாடி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.