தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா பரிசு கொடுத்தார் - என்ன பரிசுன்னு தெரியுமா?
பிரபல நடிகையும், ஆந்திர எம்எல்ஏவுமான ரோஜா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பிற்கு பிறகு நடிகை ரோஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகம் மற்றும் ஆந்திரா இடையேயுள்ள ஒரு சில பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் சொன்னேன். இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்திருக்கிறார். தமிழக முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இச்சந்திப்பின்போது நெசவு செய்யப்பட்ட துணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட எடுத்துக் காட்டி விளக்கினார். மேலும், நெசவாளர்கள் உற்பத்தி செய்த பட்டு சால்வையை தமிழக முதலமைச்சருக்கு பரிசாக அளித்தார்.