கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி பரபரப்பு புகார்
கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி முன்னாள் முதல்வர்கள் குறித்தும், பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தன்னை பற்றியும், மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும், பாஜக மூத்த தலைவர்கள் குறித்தும் இழிவான கருத்தை பதிவிட்ட கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2014 ஆம் ஆண்டு கிஷோர்.கே.சுவாமி தனது வலைதள பக்கத்தில் தன்னைப் பற்றியும், மறைந்த நடிகரும் தனது கணவருமான ரகுவரன் பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.
இந்த தவறான கருத்துகளால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். எனவே கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோகிணி குறிப்பிட்டுள்ளார்.