5 விரல்களும் பதியும் அளவிற்கு அந்த நடிகர் என்னை அறைந்தார் - நடிகை ரேவதி வேதனை !
தனது முதல் பட அனுபவங்கள் குறித்து நடிகை ரேவதி பேசியுள்ளார்.
நடிகை ரேவதி
பிரபல முன்னணி நடிகை ரேவதி, தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கு முதல் படமே ஹிட் ஆனதால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு குவிந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளும் நடித்திட்டுள்ளார்.
இவர் நடித்த புன்னகை மன்னன், மௌன ராகம் போன்ற திரைப்படங்கள் இன்றளவும் பேசப்படுகிறது. பின்னர் இவர் நடிகரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இவர் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது முதல் பட அனுபவங்கள் குறித்து ரேவதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்கு பதிலளித்த ரேவதி 'அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் பாண்டியனிடம் இருந்து நான் ஆடிவாங்கினேன். அந்த படத்தின் ஒரு காட்சியின் போது நடிகர் பாண்டியன் என்னை அடிக்க வேண்டும். அது ஒரு 4,5 டேக்குகள் போனது. அவரால் என்னை ஒழுங்காக அடிக்க முடியவில்லை.
ஒருகட்டத்தில் கடுப்பாகி அடிக்கப் போறியா இல்லையா? இல்லையென்றால் நான் அடித்துவிடுவேன் என்று கோபமாக நான் கூறினேன். அப்போது பட்டார் என்று ஒரு எனக்கு ஒரு அறை விட்டார். எனக்கு காது கேட்காத அளவிற்கு போய் விட்டது. அந்த ஷாட்டில் நீங்கள் பார்க்கலாம் எனது கன்னத்தில் 5 விரல்களும் பதிந்திருக்கும் என்று சிரித்துக்கொண்டேரேவதி பேட்டியளித்துள்ளார்.