கணவருக்கு பல பேருடன் தொடர்பு; பணத்தேவை வேறு… நடிகை ரேஷ்மா கண்ணீர்!
தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை குறித்து நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி பேசியுள்ளார்.
ரேஷ்மா பசுப்புலேட்டி
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது பாக்கிய லட்சுமி தொடர் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ரேஷ்மா பசுபுலேட்டி, தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது "முதல் திருமணம் என் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். அவர் என்னை அடிமை போல நடத்தியதால் விவாகரத்து பெற்றுக்கொண்டேன். பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாக்ஸரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனேன்.
வேதனை
ஆனால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரிந்தது. ஒரு முறை எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட சண்டையில் என்னை அடித்து விட்டார். அப்போது நான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு கடுமையான வயிற்று வலி வந்தது. அப்போது யாரும் எனக்கு உதவ முன்வராததால், தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அதன் பிறகு குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட நான்கு மாதம் இன்குபேட்டரில் இருந்தான். குழந்தை இறந்து விடுமோ என்று நான் துடிதுடித்து போனேன். கடவுள் என் குழந்தையை எனக்கு மீட்டு கொடுத்தார். இதையடுத்து அந்த நபரை விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பின் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துவிட்டேன்.
பல மருத்துவமனைகளை பார்த்து என் பையனை சரி செய்தேன். தினமும் அவனுக்கு பிசியோதெரபி தர வேண்டும் என்பதால், பணத்தேவை இருந்தது. அதனால் இரண்டு மூன்று இடத்தில் வேலை பார்த்தேன். சாப்பிட கூட எனக்கு நேரம் இருக்காது. அந்த நேரம் மிகவும் கஷ்டப்பட்டேன். மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil