நடிகை ரேகா நாயர் கார் மோதி விபத்து - கூலி தொழிலாளி பலி!
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நடிகை ரேகா நாயர்
ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). இவர் மது போதையில் அங்குள்ள பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்துக் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதியுள்ளது.

இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மஞ்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கார் விபத்து
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் எண்ணை வைத்து கார் ஓட்டுநர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்ட பாண்டி நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில்தான் இந்த கார் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil