அந்த நடிகர் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்; எனக்கு நரகாசுரன் அவர்தான் - கொந்தளித்த ரேகா நாயர்!
நடிகை ரேகா நாயர் பிரபல நடிகர் குறித்து பேட்டியளித்துள்ளார்.
ரேகா நாயர்
தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இவர் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளனர்.
அவர் நடித்தது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சனம் செய்தார். அதன்பின்னர், கடற்கரையில் பயில்வான் வாக்கிங் செல்லும்பொழுது அவரிடம் தகராறில் ஈடுபட்டார் ரேகா நாயர். அதன்மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனார். இந்நிலையில் அண்மையில் இவரிடம் நடிகர் பயில்வான் ரங்கநாதன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
பேட்டி
அதற்கு பதிலளித்த ரேகா நாயர் "பயில்வான் செத்தால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். அன்றைக்கு தான் எனக்கு தீபாவளி. என் வாழ்நாளில் நான் இதுவரை பட்டாசு வெடித்துகொண்டாடியதே இல்லை. நரகாசுரன் இறந்த நாளை தமிழர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
என்னுடைய நரகாசுரன் பயில்வான் ரங்கநாதன்தான். ஏனெனில் ஞாயங்களை சொல்லி சம்பாதிக்கலாம், ஆனால் இல்லாததை சொல்லி சம்பாதிக்கக் கூடாது. ஒருத்தரை நீங்கள் அடிப்பதும் அதே சமயத்தில் வார்த்தைகளால் காயப்படுத்துவதும், ரேகாவாக இருந்ததினால்தான் சட்டையை பிடித்து கேட்க போனேன். இதே வேறு பெண்களாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்று ரேகா பேட்டியளித்துள்ளார்.

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம் IBC Tamil
