40 வயசு ஆனாலே நடிகைகளை அப்படித்தான் பண்றாங்க - நடிகை ரேகா ஆதங்கம்!
நடிகைகளின் நிலை குறித்து நடிகை ரேகா பேசியுள்ளார்.
நடிகை ரேகா
80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேகா. சத்யராஜூடன் இணைந்து கடலோர கவிதைகள் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தொடர்ந்து, புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, நினைவே ஒரு சங்கீதம், புரியாத புதிர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்தினார்.
நடிகைகளின் நிலை
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். அதன்படி, அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாரான மிரியம்மா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய ரேகா, பாரதிராஜா சார் எப்படி கடலோர கவிதைகள் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தாரோ அதே போல, மிரியம்மா படத்தில் ஒரு நல்ல கேரக்டர் எனக்கு கிடைத்து இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குநருக்கு ரொம்ப நன்றி.
முன்பு கதாநாயகனுக்கு சரிசமமாக கதாநாயகி பாத்திரம் இருந்தது. ஆனால், அந்த நிலை மாறி தற்போதைய நாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. 40 வயசானாலே நடிகைகளை கறிவேப்பிலை போல தூக்கிப்போடுறாங்க என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.