விஜய் கூடவா - எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்!!ஒதுக்கிய பிரபல இளம் நடிகை

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தெலுங்கு நடிகை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவின் தற்போதைய உச்சநட்சத்திரம் விஜய் தான். சுமாரான படங்கள் கூட 300, 400 கோடி வசூலை நெருங்கும் அளவிற்கு விஜய்யின் புகழ் இருக்கின்றது.
தற்போது அவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் "G.O.A.T" படத்தில் நடித்து வருகின்றார். பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, லைலா என பலரும் நடித்து வருகிறார்கள்.
வரும் 2026-ஆம் தேர்தலுக்காக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக விஜய் அறிவித்துள்ளதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், தான் இன்னும் 1 படம் மட்டுமே நடிப்பேன் என விஜய் உறுதிபட அறிவித்துள்ளார்.
இது தமிழ் திரை ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது. அவரின் அடுத்த படத்தை யார் இயக்குவார்? எந்தெந்த நடிகர் நடிகைகள் நடிப்பார்கள் என்ற எந்த தகவலும் தற்போது வரை இல்லை.
இந்த சூழலில், GOAT படத்தில் ஒரு பாடலுக்கு ஆட பிரபல இளம் தெலுங்கு நடிகையான ஸ்ரீலிலாவிடம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை அவர் மறுத்ததாகவும், கூறப்படுகிறது.
இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்றாலும், இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது