ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று : சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

Regina Cassandra
By Irumporai Sep 11, 2022 09:21 AM GMT
Report

ஆண்களை மேகி நூடுல்ஸூடன் நடிகை ரெஜினா ஒப்பிட்டு பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனமாகி வருகிறது.

 ரெஜினா

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது சினிமா உலகில் படு பிசியாக உள்ளார்.

ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று :   சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை | Actress Regina Cassandra Controversial Speech Men

ஆணகள் நூடூல்ஸ் ஷாகினி டாகினி என்கிற படத்தில் நடிகை நிவேதா தாமஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷனுக்காக இருவரும் பல நேர்காணல்களில் பங்கேற்றனர். அதில் ஒரு நேர்காணலில் அடல்ட் ஜோக் சொல்வதாக கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சர்ச்சையாகும் பேட்டி

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நிவேதா, ரெஜினா இருவரும் சாப்பிட்டு கொண்டே தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்கள். அப்போது ரெஜினா, ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று தான்.

இரண்டுமே 2 நிமிடங்கள் தான் என சொல்லி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.