தாலிபான்களுக்கு பயந்து திருமணத்தை நிறுத்திய தமிழ்ப் பட நடிகை
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் நடிகை ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் விலக்கி கொண்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் மக்கள் உயிர் வாழ பயந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே தமிழில் மல்லி மிஷ்து என்ற படத்திலும், வெப் தொடர்கள், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி, தொலைக்காட்சி தொடர்கள், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ள இந்தி நடிகை அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர்.
விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன் என்றும், பெற்றோர் தனக்கு இந்திய மாப்பிள்ளையை பார்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

செம்மணியில் மனதை உருக வைக்கும் சம்பவம் : குழந்தையை அரவணைத்தவாறு கிடந்த எலும்புக்கூட்டு தொகுதி IBC Tamil
