காதலனை ரகசிய திருமணம் செய்த விஜய் பட நடிகை - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
'பிகில்' நடிகை ரெபா மோனிகா தனது நீண்ட நாள் காதலரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜாக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரெபா மோனிகா, 2018 ஆம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் நடித்த ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஃபாரன்ஸிக் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான ரெபா அஸ்வின் குமாரின் குட்டிப் பட்டாசு ஆல்பம் பாடலில் ஆடி பாடி அசத்தியிருந்தார்.
இதனிடையே கடந்த ஆண்டு தனது 27வது பிறந்தநாளை அவர் துபாயில் கோலாகலமாக கொண்டாடினார். அன்றைய தினம் நீண்ட நாட்களாக அவருடன் நட்பாக பழகி வந்த ஜோமோன் என்பவர் சர்ப்ரைஸாக ப்ரோபோஸ் செய்தார். என்னை கல்யாணம் பண்ண சம்மதமா என மோதிரத்தை காட்ட ரெபாவும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் ஜனவரி 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.