எல்லாம் பொய்யா? தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ராஷ்மிகா வேதனை!
நடிகை ராஷ்மிகா தனது செயல்களால் பல சர்ச்சைகளில் சிக்கினார் தற்போது மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
பிரபல நடிகையான ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது, அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2', மற்றும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'ரெயின்போ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து, இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். மேலும், இவரது செயல்கள் மற்றும் பேச்சினால் பல ட்ரோல்களையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
இதனால் இவர் பல இடங்களில் தனது வேதனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில், இவர் பிரபல உணவு நிறுவனத்தின் விளம்பரத்தில், சிக்கனை ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் போல் நடித்துள்ளார். இது தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் இவர், தனது நேர்காணல் ஒன்றில், "எனக்கு சைவ உணவுகள்தான் பிடிக்கும், நான் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை" என்று கூறியிருந்தார்.
அதனால் இந்த விளம்பரம் வெளியானது முதல் இவர், சைவம் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டு அசைவத்தை ப்ரமோட் செய்கிறார், சைவ உணவு சாப்பிடுவேன் என்று அவர் சொன்னது பொய்யா? என்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதேபோல, பலரும் 'ஏன் ராஷ்மிகா மந்தனா எது செய்தாலும் அவரை ட்ரோல் செய்யப்படுகிறார். சைவம், அசைவம் சாப்பிடுவது அவரவர் விருப்பம். அவரது சொந்த விருப்பங்களில் யாரும் தலையிடக் கூடாது" என்றும் பலர் கூறி வருகின்றனர்.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
