‘மேடம்.. நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க...’ - சொன்ன ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஷ்மிகா..

cute viral-video actress-rashmika
By Nandhini Mar 01, 2022 08:39 AM GMT
Report

தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தெலுங்கு தொடர்ந்து தமிழ் படங்களையும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா 2016-ம் ஆண்டு வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

அழகு மட்டுமல்ல, ராஷ்மிகா செய்யும் சின்ன சின்ன க்யூட்டான செயல்கள்தான் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

இயல்பான தோற்றம், சகஜமாக பேசும் குணம் இவைதான் ராஷ்மிகாவிற்கு தனி சிறப்பு.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘புஷ்பா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ராஷ்மிகா நடனத்தில் ‘ஏ சாமி... வாயா.. சாமி..’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகா நடந்து செல்கிறார். அவர் வரும்போது, ரசிகர் ஒருவர் மேடம்.. நீங்க ரொம்ப க்யூட்டா, அழகாக இருக்கிறீங்க.. என்று சொல்கிறார். அதற்கு பதிலாக நடிகை ராஷ்மிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

இந்த வீடியோவை பாருங்க...