நடிகர் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா? விஜய் தான் என் லவ் - ரஷ்மிகா அதிரடி!
இன்ஸ்டாகிராமில் விஜய்யை பற்றி ஒரு வார்த்தை சொல்லுமாறு ரசிகர் கேட்டதற்கு, லவ் என்று பதில் அளித்திருக்கிறார் ரஷ்மிகா மந்தனா.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரஷ்மிகா மந்தனா, கார்த்தியின் சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
ரஷ்மிகாவுக்கு பிடித்த நடிகர் விஜய் தான். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருப்பதாக அடிக்கடி கூறி வருகிறார். விஜய்யின் புதுப்படம் துவங்கும்போதெல்லாம் ரஷ்மிகா தான் ஹீரோயின் என ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு காத்திருப்பர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் ரஷ்மிகா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த ரஷ்மிகா, ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.
அதற்கு ரஷ்மிகா கொஞ்சமும் யோசிக்காமல் லவ் என்று பதில் அளித்தார். மேலும், நான் விரைவில் விஜய் சாருடன் சேர்ந்து நடிப்பேன் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
ரஷ்மிகாவின் இந்த அறிவிப்பால்
ரசிகர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.