ஊரடங்கில் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடிகை ராஷி கண்ணா
Covid curfew
Actress rashikanna
By Petchi Avudaiappan
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு நடிகை ராஷி கண்ணா உணவளித்து வரும் சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிகம் பாதித்த மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று.அங்கு ஊரடங்கு அமலில் இருப்பதால், ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து திண்டாடி வருகிறார்கள்.
அவர்களுக்கு நடிகை ராஷி கண்ணா ரொட்டி பேங்க் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தினமும் உணவளித்து வருகிறார்.
இதற்காக ஒரு தனிக்குழுவை ஏற்படுத்தியுள்ள அவர்,உங்களால் ஆன நிதியை அளிக்கலாம். 100 பேருக்கு உதவமுடியவில்லை என்றாலும் ஒருவருக்காவது உதவலாமே! என சமூக வலைத்தளங்கள் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.