பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா தான் - நடிகை ரஞ்சிதா பரபர தகவல்!
பெண்கள் முன்னேற்றத்தில் கைலாசா எப்போதும் முன்னுரிமை தருவதாக ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
கைலாசா
90களின் முன்னணி நடிகையும், நித்யானந்தாவின் தீவிர பக்தையுமான ரஞ்சிதா, Podcast நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், கைலாசா, முதல் இந்து தேசம். இன்று இந்துக்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்.
கைலாசாவில் எல்லாமே இலவசம். கல்வி இலவசமாக கிடைக்கிறது. சுவாமி நித்யானந்தர் அதில் உறுதியாக இருக்கிறார். விலங்குகளை கொலை செய்வதை அங்கு அனுமதிப்பதில்லை. அதனால் அசைவங்களுக்கு அனுமதியில்லை.
நடிகை ரஞ்சிதா
2009ல் சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன். அவர் பார்த்ததும் புன்னகைத்தார். அவர் அனைவரிடமும் பேசினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருந்தார். பணம், பொருள் சம்பாதிக்கும் எந்த எண்ணமும், நோக்கமும் அங்கு இல்லை. பெண்கள் முன்னேற்றத்தில் கைலாசா எப்போதும் முன்னுரிமை தருகிறது.
உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் தன்னுடைய பிரதிநிதியாக பெண்களை தான் கைலாசா அனுப்புகிறது. மற்ற எந்த நாடுகளும் இதை செய்வதில்லை. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று நித்தியானந்தர் அறிவித்தார்.
ஆனால் இன்று கைலாசாவின் பொறுப்புகளில் 98 சதவீதம் பெண்கள், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.