‘’ என் கணவர் எப்போதும் கூல், எதையும் கண்டுக்கவே மாட்டார் ‘’ - வைரலாகும் நித்தி சீடர் ரஞ்சிதாவின் பேட்டி
என் கணவர் எதையும் கண்டுகொள்ள மாட்டார் என நித்யானந்தா சிஷ்யையும் நடிகையுமான ரஞ்சிதா அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
நித்யானந்தா இந்த பெயர் சர்சையாகும் போதெல்லாம் இந்த பெயரும் இடம் பெறும் அவர் தான் நடிகை ரஞ்சிதா, 80 களின் இறுதியில் 90 கள் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த நடிகை ரஞ்சிதா திடீரென சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அமைதியாக இருந்தார்.
பின்னர் தனது பயணத்தை ஆன்மிகம் நோக்கி திருப்பினார் அதுவும் நித்யாநித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இந்த நிலையில் தான் , நிதயானந்தாவும் ரஞ்சிதாவும் ஒரே அறையில் இருந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் ரஞ்சிதா கடந்த ஆண்டு பிரபல நாளிதழ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் ரஞ்சிதா கூறுகையில் எனக்கு அப்படியே மாறுபட்டவர் என் கணவர், அதிகமாக யாரிடமும் பேச மாட்டார். நான் வாழ்க்கையிலேயே பார்த்த ஒரே பேலன்ஸ்டு நபர் அவர்தான்.
என்ன கோபம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். பல ஆண்கள் அலுவலகத்தில் உள்ள பிரச்சினையை வீட்டில் காட்டுவார்கள். சண்டை போடுவார்கள். ஆனால் எனது கணவர் அப்படி செய்யமாட்டார். 16 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில் ஒரு நாள் கூட கோபப்பட்டு பார்த்ததே இல்லை.
யாராவது என்னை பேசிவிட்டால் , நான் கோபப்படுவேன். ஆனால் அவர் என்னை சமாதானம் செய்வார். நான் கோபப்பட்டாலும் புத்தகம் படித்தால் அந்த கோபத்தையே மறந்துடுவேன். புத்தக வாசிப்பு நம் மனநிலையையே மாற்றிவிடும்.
வீட்டில் ஏதாவது சண்டை போட்டியிருந்தால் கூட அதை 2 நாள் கழித்து கேட்டால் எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. உங்களுக்கு எதுபிடிக்குதோஅதை செய்யுங்கள் அது உங்களை மாற்றும் என ரஞ்சிதா பேட்டியில் கூறியிருந்த நிலையில்
தற்போது நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், ரஞ்சிதாவின் இந்த பேட்டி மீண்டும் கவனத்தை பெறுகிறது.