பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்
By Swetha Subash
பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
அன்னூர் தெலுங்குபாளையத்தை சார்ந்த ரங்கம்மாள் பாட்டி எம்ஜிஆர் போன்ற தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும், சுமார் 500-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், இந்தி மொழி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்த பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாக திகழ்ந்தவர் ரங்கம்மாள் பாட்டி.
இவர் தனது இறுதி காலத்தில், வறுமையின் காரணமாக மெரினா கடற்கரையில் கைக்குட்டை விற்று வந்தார்.
இந்த நிலையில், நடிகை K.R.ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹிஜாப் யூனிபோர்மில் டபிள் கேம்!12 வருடங்களாக மாகாண தேர்தல் இல்லை…22 க்கு சர்வஜன தேர்தலாம்! IBC Tamil
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil