காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன்- கங்கை நதிக்கரையில் திருமணம் நடக்க காரணம் இதுதான்!
நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் இன்று ரிஷிகேஷில் சிவபுரி கங்கை நதிக்கரையில் நடைபெற்றது.
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் நடிகை ரம்யா பாண்டியனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெளியான படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து, தோல்வியைச் சந்திக்கவே ரம்யா பாண்டியன் சின்னதிரையில், களமிறங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக வந்தார்.இதனால் ரசிகர்களிடம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட. இவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ரவி சங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் இணைந்தார்.
திருமணம்
இந்த ஆசிரமத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் வந்த லவல் தவான் என்பவருக்கும் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர் தொழிலதிபராகவும் உள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் இன்று ரிஷிகேஷில் சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் நடைபெற்றது.
லவல் தவான் ஆசிரமம் அருகில் உள்ளதால் காதலின் நினனவாக திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வரும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடிகை ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.