இந்த நடிப்பை வச்சுட்டு எப்படி என்று கேட்டார்? தெலுங்கு சினிமாக்கு போயிட்டேன் - ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்!
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மாஸ் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்பொழுது வரை அந்த மாஸ் லுக்கை வைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் படையப்பா என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபல நடிகையானார்.
இவர் பல படங்களில் அம்மன் வேடத்தில் அசத்தியுள்ளார், 90ஸ் கிட்ஸ்களுக்கு அம்மன் என்றாலே இவர் தான் என்று தோன்றும் அளவிற்கு அவர் மனதில் பதிந்துள்ளார். மேலும், அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த பாகுபலி படத்தில் இவரது ராஜமாதா கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தது.
தற்போது 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இனைந்து இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் என்ற படத்தில் நடித்தார். படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பேட்டி
இந்நிலையில் சமீபத்தில் பேசிய ரம்யா கிருஷ்ணன் ' வெள்ளை மனசு என்ற தமிழ் படத்தின் மூலமாகத்தான் முதன் முதலில் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு நடிப்பு வரவில்லை. அப்போது நான் சிறந்த நடிகையும் இல்லை.
1988-ல் நான் நடித்த முதல் வசந்தம் படத்தை இப்போது பார்த்த எனது அம்மா 'நீ இந்த நடிப்பை வைத்துக்கொண்டு இவ்வளவு காலம் நடிகையாக எப்படி நீடிக்கிறாய்? என்று ஆச்சரியப்பட்டு கேட்டார். இதிலிருந்து எனது நடிப்பு அப்போது எப்படி இருந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் நான் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தன.
இதனால்தான் தெலுங்கு சினிமா துறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அங்கு கிடைத்த ஒவ்வொரு பட வாய்ப்பையும் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தேன்'' என்று ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார்.