என் கணவர் முதலில் தமன்னாவை தான்.. சரி வச்சுக்கோங்க - நடிகை ரம்பா வேதனை!
நடிகை ரம்பா தனது கணவர் குறித்து பேசியுள்ளார்.
நடிகை ரம்பா
உழவன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சாரக் கண்ணா, சுக்ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, அஜித், விஜய், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். 90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்த ரம்பா கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்தார். அதற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக ரம்பா தெரிவித்துள்ளார்.
சந்தோஷம் தான்
இது அவரின் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ரம்பா, தனது கணவர் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது "நான் இதுவரை எனது கணவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோவ் செய்யவில்லை. ஏனெனில் நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என்னைத்தான் முதலில் ஃபாலோ செய்ய வேண்டும் என்று. ஆனால் அவர் தமன்னாவை ஃபாலோ செய்தார்.
அப்போது சரி நீங்கள் அவளையே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். எனக்கு அதில் சந்தோஷம் தான். இருந்தாலும் ஒரு மனைவியா எனக்கு தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.