நான் செய்த முட்டாள் தனம்..6 வாரங்கள் படுத்த படுக்கையாக தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் - என்ன ஆச்சு?
ரகுல் ப்ரீத் சிங் ஆறு வாரங்களாக படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங்
தமிழில் தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக படங்கள் நடித்து முன்னணி நாயகியாக தற்போது வளம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் இவர் நடிப்பில் தமிழில் "அயலான்" மற்றும் இந்தியன் 2 படம் வெளியானது.
இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் அக்டிவ்வாக இருக்கும் இரு நபர் ஆவார். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் அதிக அக்கறை காட்டி வருபவர் ரகுல். எனவே அது தொடர்பாக ஜிம் ஒர்க்அவுட் வீடியோக்களை பதிவேற்றி வருபவர்.
அந்த வகையில், சமீபத்தில் அவர் செய்த உடற்பயிற்சி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ரகுல், 80 கிலோ எடை கொண்ட வெயிட்லிப்டை தூக்கியுள்ளார்.
என்ன ஆச்சு?
இதில் அவருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட, அதில் இருந்து மீள முடியாமல் கடந்த 6 வாரமாக தவித்து வருகிறார். இது தொடர்பாக் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “நான் செய்த முட்டாள் தனமான தவறு இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
அதிவிரைவில் நான் குணமடைய வேண்டும். ஒரே இடத்தில் தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு எளிதான விஷயம் அல்ல. ஆனால் இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதை பற்றி தற்போது பேசியுள்ள ரகுல், “முதுகு பிடிப்பு ஏற்பட்டதை பொருட்படுத்தாமல், உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். அங்கு முதுகு வலி மிகவும் அதிகமானது. அந்த வலியால் துடிதுடித்து போனேன்.
என் உடலின் கீழ் பகுதி என்னை விட்டு தனியாக பிரிந்தது போல் வலி அது. நான் இன்னும் 100 சதவீதம் குணமாகவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் குணமாவேன்” என்றார்.