சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா : தனது காதலரை அறிமுகம் செய்த நடிகை ரகுல் பிரீத் சிங்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது தமிழில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங் இந்நிலையில் தனது பிறந்தநாளில் நடிகை ரகுல் அவரின் காதல் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Jackky Bhagnani-யை காதலிப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பதவில் "நன்றி அன்பே இந்த ஆண்டு நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையில் வண்ணத்தைச் சேர்த்த உனக்கு என்னுடைய நன்றி.
என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி.
நீ நீயாக இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாகச் சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்கியதற்கு என
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் ப்ரீத் தனது சிங் தெரிவித்துள்ளார்.