திருமண முடிந்து ஒரு வாரம் கூட ஆகல.... - கதறி அழுது வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை...!

Indian Actress
By Nandhini Jan 14, 2023 01:56 AM GMT
Report

ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை

பாலிவுட் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் நடிகை மட்டுமல்லாமல், அரசியல்வாதியுமாவார். இவர் நாட்டியக் கலைஞராகவும், அழகுப் பதுமையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இவர் இந்தித் திரைப்படங்கள் உட்பட, கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ராக்கி சாவந்த் தனது காதலன் அடில் கான் துரானியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உறுதிசெய்தார்.

Rakhi Sawant

கதறி அழுத ராக்கி சாவந்த்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகை ராக்கி சாவந்த் கதறலுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தன் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று கண்ணீர் விட்டுள்ளார். மேலும், தன் அம்மா மருத்துவமனையில் கேன்சருடன் போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தன் அம்மாவுக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது என்றும் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.

தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ராக்கி சாவந்த்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.