வலிகளோடு கண்கலங்கி அழுத சீரியல் நடிகை ரக்ஷிதா - ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ரக்ஷிதா வலிகளோடு கண்ணீர் சிந்தியபடி அழுத வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
காதல் திருமணம்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் கன்னட நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி.
இவர் நடித்த சரவணன் மீனாட்சி, நாம் .இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்தன் மூலம் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.
ரக்ஷிதா கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கோ ஸ்டாராக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருந்தாலும், அவ்வப்போது சில பிரச்சனைகள் எழுந்தது.
விவாகரத்து செய்ய முடிவு
இதற்கு முக்கிய காரணம் ரக்ஷிதா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்ததால், குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்தது என கூறப்பட்டது.
ரக்ஷிதா தனக்கும் கணவருக்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்து இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் பிக்பாஸ் ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது தினேஷ் இது சாதாரண குடும்ப சண்டை தான் என்றும் கண்டிப்பாக இருவரும் சேர்ந்து வாழ்வோம் என தெரிவித்தார். பிரச்சனை கை மீறி போகவே தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரியும் நிலையில் உள்ளனர்.
கண்கலங்கி அழுகை
இந்நிலையில் ரக்ஷிதா நயன்தாராவின், இதுவும் கடந்து போகும் பாடல் பேக் ரவுண்டில் ஓட, தன்னுடைய மன வேதனை மற்றும் வலிகளை மௌனத்தின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் சிந்தி அழுத வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்து பதறியபடி ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவுடன் அவர் போட்டுள்ள பதிவில், வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக... கடந்த வருடங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள்.
இந்த மௌன போர்கள், உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்டு... உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள் பாடலில் ஆழமாக போகிறேன் கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.