மனவேதனையோடு தனிமையில் இருக்கிறேன்... கணவரை பிரிந்த பிரபல சீரியல் நடிகை வருத்தம்
கணவரை பிரிந்து நான் மனவேதனையில் இருக்கிறேன் என பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ரக்ஷிதாவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து 2015 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்துகொண்டார்.
அதன்பின் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி-2 சீரியலில் கவினுடன் இணைந்து நடித்தார். தங்க மீனாட்சி என்ற அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குடும்பம் , சீரியல் என ரொம்ப பிஸியாக இருந்த ரக்ஷிதா, தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இருவரையும் சமாதானப்படுத்த இரு வீட்டாரும் முயன்ற போதும் இருவரும் சமாதானம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவிய நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல மறந்த கதை என்னும் தொடரில் நடித்து வருகின்றார்.
இதில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை வளர்க்க போராடும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரமும் தனது சொந்த வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாகவும் தற்போது தனிமையில் மனவேதனையோடு இருப்பதாக ரக்ஷிதா கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.