பாஜகவில் இணையும் நடிகை ராதிகா சரத்குமார் - மோடியை தனியாக சந்தித்து பேச்சு
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த தமிழ் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ராதிகா சரத்குமார் திடீரென பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டு விழா
மத்திய இணை அமைச்சர் எல்.முருகனில் டெல்லி வீட்டில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டார்.
இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் பிரதமர் மோடி வரும் போது அவரை வரவேற்க பலரும் வரிசையில் நின்றிருந்தனர். அந்த வரிசையில் ராதிகாவும் நின்று கொண்டிருந்தார்.
பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
அப்போது வரிசையாக நின்றவர்களை பார்த்து வணக்கம் வைத்துக்கொண்டே வந்த மோடி,ராதிகாவையும் பார்த்து சிரித்தப்படி வணக்கம் வைத்தார்.
பிறகு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.இதனால் ராதிகா பாஜகவில் ராதிகா இணைவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.