இப்போ அதுக்கு வாய்ப்பே இல்ல; எரிச்சலா இருக்கும்.. - நடிகை பிரியங்கா மோகன் பளீச்!
பிரியங்கா மோகன்
டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.
திருமணம் எப்போது?
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அவர் "எனக்கு இப்போ எல்லாம் கல்யாணம் இல்ல. கல்யாணம் ஆகும்போது நான் உங்ககிட்ட சொல்றேன். சில பேருக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கும்.
சில பேருக்கு இந்த கேள்வியே எரிச்சலா இருக்கும். நான் இந்த எதிலுமே இல்ல. இப்போ நான் படம் நடிக்கிறேன். கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். நடக்கும்போது சொல்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil