ஓரளவுக்கு மேல அத காட்டி நடிக்க முடியாது; அதுக்கு ஒத்து வரணும் தானே.. - பிரியங்கா மோகன் பளீச்!
கிளாமர் ரோல்களில் நடிப்பது குறித்து நடிகை பிரியங்கா மோகன் பேசியுள்ளார்
பிரியங்கா மோகன்
டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியங்கா மோகன் கிளாமர் ரோல்களில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
கிளாமர் ரோல்
அவர் பேசியதாவது " என்னால் ஓரளவிற்கு மேலே தோலை காண்பித்து நடிக்க முடியாது. எனக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. கிளாமர் உங்களுடைய தோலிற்கு ஒத்துவரவேண்டும் இல்லையா..
தோலை காண்பித்தால்தான் அது கிளாமர் என்று சொல்லிவிட முடியாது. அதனை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம்.
ஆகையால் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் இருக்கும் கிளாமர் யாரும் முகம் சுழிக்க முடியாத அளவு இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.