கணவருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை பிரியங்கா சோப்ரா - ரசிகர்கள் உற்சாகம்

Priyanka Chopra photos viral diwali celebration
By Anupriyamkumaresan Nov 07, 2021 06:24 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் தீபாவளி பண்டிகையை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார். உலக அழகிப் பட்டத்தை வென்றவுடன் முதன் முதலில் நடிகையாக பிரியங்கா சோப்ரா அறிமுகமானது நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில்தான்.

அதனைத் தொடர்ந்துதான் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி ஃபேஷன் படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.

15 ஆண்டுகளாள பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தவர் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை பிரியங்கா சோப்ரா - ரசிகர்கள் உற்சாகம் | Actress Priyanka Chopra Diwali Celebration Enjoy

இவர்களின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்குப்பிறகு பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனஸும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தங்கள் காதல் இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை தனது கணவர் நிக் ஜோனஸுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தங்கள் புதிய இல்லத்தில் பிரியங்கா சோப்ரா கொண்டாடியுள்ளார்.

இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.