நடிகர் பிரியாமணியும் கணவரை விவாகரத்து செய்கிறாரா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை
தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக நடிகை பிரியாமணி குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை பிரியாமணி. பருத்தி வீரன் படத்தின் மூலம் நன்கு அறிமுகத்தை பெற்ற இவர், அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் சயனைடு மோகன் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார் .
சினிமாவில் பிசியாக நடித்து வந்த பிரியாமணி கடந்த 2014-ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக 4 வருடங்களை கழித்து வந்த இவர்கள் வாழ்க்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய சிக்கல் ஏற்பட்டது. முஸ்தபாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாவும், அவருக்கு ஆயிஷா என்ற மனைவி இருந்ததாகவும், அவரை விவாகரத்து செய்யாமலேயே பிரியாமணியை திருமணம் செய்துக்கொண்டதாகவும் அடுக்கடுக் காக புகார் எழுந்தது.
ஆனால் இதை மறுத்து வந்தார் பிரியாமணியின் கணவர் முஸ்தபா. இருந்தப்போதிலும் பிரியாமணிக்கும் முஸ்தபாவுக்கு கருத்து வேறுபாடு எழுந்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடர்பாக நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்த பிரியாமணி, தற்போது கணவருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக நீடித்து வந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.