மகேந்திரனுடன் அது நடந்ததே தப்பு.. ரொம்ப அனுபவிச்சுட்டேன் - நடிகை பிரேமி வேதனை!
இயக்குநர் மகேந்திரன்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். தொடர்ந்து உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
மேலும், நடிகர் விஜய்யின் 'தெறி' என படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் நிமிர், சீதக்காதி, பேட்ட, பூமராங் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் இயக்குநர் மகேந்திரனை திருமணம் செய்து கொண்டதே என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என பழம் பெரும் நடிகை பிரேமி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் "இயக்குநர் மகேந்திரனை நடிகர் செந்தாமரை தான் அறிமுகம் செய்தார்.
தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தான் நான் முதன்முறையாக அவரை பார்த்தேன். அதன்பிறகு முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு ஆடிசனுக்கு என்னை அழைத்தார்கள். ஆனால், அங்கு செல்வதற்கு முன்னே அங்கு போக வேண்டாம் என்று என்னுடைய மனது கூறியது. அதனால் நான் அங்கு செல்லவில்லை. உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இயக்குநர் இவர்தான் என்று முதலில் எனக்கு தெரியாது. அது தெரியாமல், நான் அந்த ஹோட்டலுக்கு சென்றேன். பார்த்தால் அங்கு மகேந்திரன் இருக்கிறார்.
நடிகை வேதனை
அதன் பின்னர்தான் அந்தப்படத்தின் இயக்குநர் அவர் என்று தெரிய வந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தோம்,பார்த்தோம், பழகினோம். விருப்பப்பட்டோம். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியும். ஆனாலும் நான் அவரை விரும்பினேன். அது தவறு.
அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது என்று தெரிந்த பின்னராவது நான் அவரை விட்டு சென்று இருக்க வேண்டும். அதுதான் நியாயமான விஷயம். அந்த விஷயத்தில் நான் செய்தது தவறுதான். அதற்கான தண்டனையை நான் நன்றாகவே அனுபவித்து விட்டேன். அவருடன் கிட்டத்தட்ட நான் ஒரு ஏழு வருடங்கள் வாழ்ந்தேன். எங்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டார்.
அதனால் அவரால் இரண்டு குடும்பத்தையும் கையாள முடியவில்லை. அதனால் அவர் என்னை விட்டு விலகி விட்டார். அவர் பிரிந்த பின்னர், நான் மிக மிக கஷ்டப்பட்டேன். மன ரீதியாகவும் சரி, பணரீதியாகவும் சரி, மிகப்பெரிய கஷ்டத்தை சந்தித்தேன். என்னுடைய குடும்பம்தான் அந்த சமயத்தில் எனக்கு கை கொடுத்து, அவர்களோடு அணைத்துக் கொண்டது. நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். தனி மனுஷியாக இருந்து என்னுடைய பையனை வளர்த்தேன்.” என்று பேசினார்.