நடிக்கவிடாமல் பண்ண வடிவேலு...விஜய் படப்பிடிப்பில் நடந்த சோகம்..கண்ணீர் மல்க சொன்ன நடிகை
நடிகர் வடிவேலு குறித்து பல துணை நடிகர்கள் குற்றசாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், தற்போது நடிகை ப்ரேமப்ரியாவும் தனது குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
தொடரும் குற்றச்சாட்டுக்கள்
காமெடி கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்த போது நடிகர் வடிவேலுடன் பல துணை நடிகர்கள் நடித்து பெரும் பிரபலத்தையும் வரவேற்பையும் ரசிகர்களிடத்தில் பெற்றனர்.
ஆனால் சில காலம் பிறகு, வடிவேலு தனது இடத்தை இழந்த பிறகு வடிவேலு மீதான பல விமர்சனங்களை பலரும் முன்வைக்க துவங்கினர். வருத்தத்துடன் கூறிய அந்த லிஸ்டில் தற்போது நடிகை ப்ரேமப்ரியாவும் இணைந்துள்ளார். இவர் படத்தில் வடிவேலுவுடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வருத்தத்துடன் ப்ரேமப்ரியா
அந்த பேட்டியில் அவர் பேசியது - சுறா படத்தில் இயக்குனர் ராஜ்குமார் மூலம் படத்தில் நடிக்க சென்றேன். அது வடிவேலு சாருக்கு தெரியாது. படப்பிடிப்பின் போது என்னை வடிவேலு சார் பார்த்துவிட்டார். யார் மூலமாக நடிக்க வந்துருக்க என்று கேட்டார்.
இயக்குனர் மூலமாக தான் நடிக்க வந்தேன் சார் என கூறினேன். பின் ஒரு காட்சியில் நானும் வடிவேலு சாரும் நடித்தோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் வடிவேலு சாரிடம் அதன்பின் பேசினேன்.
ஏன் சார் இப்படி பண்றீங்க, நீங்க எங்கேயோ இருக்கீங்க நான் இப்போ தான் வளர்ந்து வரேன். நான் நடிக்கவிருந்த பல படங்களில் என்னை நடிக்கவிடாமல் திருப்பி அனுப்பி வெச்சிடீங்க. என்ன காரணம் என கண்கலங்கி அழுதேன். நான் அழுததை பார்த்து 'சரி விடு மா' என கூறினார் வடிவேலு'. இவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.