பிரபல மலையாள நடிகையை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட தமிழக இளைஞர்கள்
பிரபல மலையாள நடிகையின் மார்பிங் செய்த ஆபாச போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகை பிரவீணா தமிழில் சில படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது ஆபாச போட்டோக்கள் சில இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியானது.
இதைப்பார்த்து நடிகை பிரவீணாவும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த ஆபாச போட்டோக்களில் இருப்பது சம்பந்தப்பட்ட நடிகையில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமிடம் பிரவீணா புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யாயா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில் பிரவீணாவின் போட்டோ ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு அதை பதிவிடுவதற்காகவே இன்ஸ்டாகிராமில் போலி ஐடி உருவாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
அந்த ஐடி குறித்த தகவல்களை போலீசார் சேகரித்த
நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், பாக்கியராஜ் என்ற 2 பேரும் சிக்கினர். நாகர்கோயிலில் மணிகண்டனை கைது செய்யப்பட்ட நிலையில், பாக்கியராஜ் டெல்லி சாகர்பூர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டெல்லி சென்ற கேரள தனிப்படை போலீசார், சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். 2 பேரையும் நேற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
