தமிழ் சீரியல்களில் நடிக்க அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஆகனும் - போட்டுடைத்த பிரபல நடிகை!
தமிழ் சீரியல் குறித்து நடிகை பிரவீனா பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை பிரவீனா
மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்த நடிகைகளில் ஒருவர் நடிகை பிரவீனா. கோமாளி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதன்பின், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, ராஜா ராணி, மகாராசி, இனியா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
தமிழ் சீரியல்
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழ் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்றால் ஓவர் ஆக்டிங் செய்து தான் ஆக வேண்டும். அதுவே மலையாளம் சீரியல்களில் கதை இயல்பாக இருக்கும் அதற்கு ஏற்ற முக பாவங்களை வெளிப்படுத்தினால் போதும்.
அது மிகவும் சிறப்பாக அமைந்து விடும். ஆனால் தமிழ் சீரியல்களில் அதிகமான முக பாவனைகளை வெளிப்படுத்த வேண்டும். ஏதாவது அதிர்ச்சியாக நடந்தால் முகத்தை மிகவும் அதிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியாக இருந்தால் அதிகப்படியான மகிழ்ச்சியாக இருப்பது போல முக பாவங்களை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு நடிகையாக நான் இதை அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும் எனத் தெரிவித்துள்ளார்.