இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கிய நடிகை

1 month ago

 தனது அறக்கட்டளை மூலம் இலவச கொரோனா தடுப்பூசியை செலுத்த நடிகை பிரணிதா சுபாஷ் உதவியிருக்கும் சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

கொரோனா 2வது அலை பரவி வரும் சூழலில் தனது பிரணிதா அறக்கட்டை மூலம் தொடர்ச்சியாக கொரோனா நிவாரணப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

மருத்துவமனைகள் படுக்கைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கிக்கொடுப்பது என பல்வேறு சேவைகளை பிரணிதா செய்து வருகிறார்.

இந்நிலையில், தனது அறக்கட்டளையில் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று பெங்களூருவில் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி முகாம் அமைத்து ஆர்.வி மருத்துவமனையில் தனது சொந்த செலவில் இலவச தடுப்பூசியை வழங்கினார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்