உயிருக்கு உயிராக காதலித்தேன்!ஆனால்.. - இறந்த நடிகையின் பகீர் கடிதம்
நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முன்னதாக அவர் எழுதிய கடிதம் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தற்கொலை
சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா என்ற தீபா. இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்தார். சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து வாய்தா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ள் முயன்றும் ஜெசிகா அழைப்பை எடுக்கவில்லை.
சிக்கிய கடிதம்
அதன்பின் அவரது நன்பரான பிரபாகரன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், முதல்கட்ட விசாரணையில் முன்னதாக நடிகை எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், "எனக்கு போதிய படவாய்ப்புகள் இல்லை. நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை.
யாரும் காரணம் இல்லை
இதனால் இந்த உலகில் வாழ எனக்கு விருப்பமில்லை. எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இதன் அடிப்படையில் நடிகை யாருக்கெல்லாம் அழைத்து போனில் பேசியுள்ளார் என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.