டான்சர் கன்னத்தை கடித்த நடிகை பூர்ணா- வைரலாகும் வீடியோ
ரியாலிட்டி ஷோவில் நடனமாடிய போட்டியாளர்களை கன்னத்தை கடித்த நடிகை பூர்ணா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூர்ணா ஹீரோயின்,வில்லி, என வித்தியாசமான கேரக்டரில் நடித்து தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். சமீபத்தில் தலைவி படத்தில் நடித்த சசிகலாவின் கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே அவர் தெலுங்கு இடிவியில் தீ சாம்பியன்ஸ் ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். அவர் நடனமாடும் போட்டியாளரை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டு கடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவர் யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் அப்படி தான் செய்வாராம். இதனை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.