வருங்கால கணவரின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை : ரசிகர்கள் வாழ்த்து!
தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா, தமிழில் பிசாசு-2, கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் சில வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை பூர்ணாவிற்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், தனது வருங்கால கணவர் ஆசிப் அலியுடன் தான் இருக்கும் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ள அவர், என் பெற்றோரின் ஆசியுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.