நடிகையை கர்ப்பமாக்கிய இயக்குநர் - பிரபல நடிகையின் பதிவால் சர்ச்சை!

Sexual harassment Indian Actress
By Sumathi Oct 12, 2024 06:11 AM GMT
Report

பாலியல் தொல்லை குறித்து பூனம் கவுர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

பாலியல் தொல்லை

மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்களை ஹேமா கமிஷன் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. தொடர்ந்து, நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

poonam kaur

தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி, என் வழி தனிவழி, நாயகி உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளவர் பூனம் கவூர்.

கருக்கலைப்பு... ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்கனுமா? பிரபல நடிகை கருத்து!

கருக்கலைப்பு... ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்கனுமா? பிரபல நடிகை கருத்து!


பூனம் கவுர் பதிவு

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கு இயக்குனர் ஒரு நடிகையைக் கர்ப்பமாக்கி அந்தப் பெண்ணின் சினிமா வாழ்க்கையை நாசம் செய்தார். சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குனர் செய்த கொடூரமான இந்த விஷயத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டுப் பாதிக்கப்பட்ட அந்தப் பஞ்சாபி நடிகைக்குக் கொஞ்சம் உதவி செய்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் பவன் கல்யாண், தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம் ஆகியோர் மீதும் பூனம் கவுர் குற்றச்சாட்டுகள் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.